வங்கதேசத்தில் இந்துக்கள் வன்முறையை சந்தித்து வருவதாகவும், அவர்களின் நலனை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்றும் ஆர்எஸ்எஸ் தேசிய தலைவர் மோகன் பகவத் வலியுறுத்தியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் தேசிய தலைவர் மோகன் பகவத் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அப்போது பேசிய அவர், சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டிய கடமை வருங்கால சந்ததியினருக்கு உள்ளது என்றார்.
மற்ற நாடுகளில் ஆதிக்கம் செலுத்த விரும்பும் நபர்கள் எப்போதும் இருக்கிறார்கள், எனவே நாம் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார். அவர்களிடமிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இந்தியா மற்றவர்களுக்கு உதவும் பாரம்பரியம் கொண்டது என்றும், கடந்த சில ஆண்டுகளாக இந்தியா எந்த நாட்டையும் தாக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
அண்டை நாட்டில் சிறுபான்மையினர் தாக்குதலுக்கு உள்ளாகி வருவதாகவும், அவர்களை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மோகன் பகவத் கூறினார்.
Discussion about this post