காங்கிரஸ் எம்எல்ஏ வீட்டில் 15 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது.
மத்திய பிரதேசத்தின் ரகோகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜெயவர்தன் சிங். இவர் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்கின் மகன் ஆவார். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் ஜெயவர்தன் சிங் அமைச்சராக பதவி வகித்தார்.
தற்போது மத்தியப் பிரதேசத்தில் பாஜக ஆட்சி செய்து வரும் நிலையில், அம்மாநில எம்எல்ஏக்களுக்கு அரசு வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஷார் இம்லி பகுதியில் ஜெயவர்தன் சிங்குக்கு வீடு ஒதுக்கப்பட்டுள்ளது.
நேற்று அந்த வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டினர். யாரும் இல்லாத நேரத்தில் வீட்டுக்குள் புகுந்த கொள்ளை கும்பல், லாக்கரை உடைத்து அதிலிருந்த ரூ.15 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எம்எல்ஏ வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post