பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் பேசினார்.
இந்தியாவின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரதமர் நெதன்யாகு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேற்கு ஆசியாவின் தற்போதைய நிலைமை குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.
பதற்றத்தைத் தணிக்க வேண்டியதன் அவசியத்தை பிரதமர் மோடி வலியுறுத்தினார். அனைத்து பணயக்கைதிகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை தொடர வேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் வலியுறுத்தினார்.
தற்போதைய மோதலுக்கு பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திர அடிப்படையில் கூடிய விரைவில் அமைதியான தீர்வு காணப்பட வேண்டும் என்றும் பிரதமர் கூறினார்.
இரு தரப்பும் பல்வேறு இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் இந்தியா-இஸ்ரேல் ராணுவ ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் விவாதித்தனர்.
இரு தரப்பினரும் தொடர்பில் இருக்க ஒப்புக்கொண்டனர்.
Discussion about this post