150 கோடி ஊழல் வழக்கு தொடர்பாக நடிகையும், முன்னாள் அமைச்சருமான ரோஜாவை விசாரிக்க விஜயவாடா போலீஸ் கமிஷனருக்கு ஆந்திர சிஐடி போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.
ஆந்திராவில் ஜெகன்மோன் ரெட்டி ஆட்சியில் நடிகை ரோஜா கடந்த 2 ஆண்டுகளாக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.
அப்போது ரோஜா தலைமையில் “ஆவுதம் ஆந்திரா” என்ற பெயரில் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
இதற்காக ஆந்திர அரசு 150 கோடி ரூபாய் ஒதுக்கியது. இந்நிலையில், விளையாட்டு போட்டிக்கான டெண்டர் விடப்பட்டதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், தற்போது போலீஸ் விசாரணை சூடுபிடித்துள்ளது. ஆந்திர சிஐடி காவல்துறையும் ரோஜாவிடம் விசாரணை நடத்த விஜயவாடா காவல்துறை ஆணையருக்கு பரிந்துரை செய்துள்ளது.
Discussion about this post