வங்கதேசத்தில் இந்துக்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை சம்பவங்களை எதிர்கொண்டு அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு பெண்கள் மேம்பாட்டு கவுன்சில் ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு கடிதம் எழுதியுள்ளது.
வங்கதேசத்தில் மாணவர்களின் தொடர் போராட்டத்தால் வங்கதேச பிரதமர் பதவியில் இருந்து கடந்த 5ம் தேதி ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா டெல்லியில் தஞ்சமடைந்தார்.
இதையடுத்து, வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தபோது ஷேக் ஹசீனாவுக்கு எதிரான போராட்டம் இந்துக்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையாக மாறியது.
இந்நிலையில், பாதிக்கப்படும் வங்கதேச இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி, ‘மகளிர் மேம்பாட்டு மன்றம்’, ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு கடிதம் எழுதியுள்ளது.
அதில், இந்து வழிபாட்டுத் தலங்களில் மக்கள் தாக்கப்படுவதாகவும், பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்துக்கள் தாக்கப்பட்டு புலம்பெயர்ந்து செல்ல நிர்ப்பந்திக்கப்படுவதாகவும், தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, வங்கதேச அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்துக்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்கு கொண்டு வர ஜனாதிபதி திரௌபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ‘மகளிர் மேம்பாட்டு மன்றம்’ வேண்டுகோள் விடுத்துள்ளது.
அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்ட வங்கதேச மக்களுக்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post