மருத்துவர்களின் பாதுகாப்பு தொடர்பான பரிந்துரைகளை பெற குழு அமைக்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. குறிப்பாக மேற்கு வங்க மாநிலத்தில் மருத்துவர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால் மருத்துவப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்திய மருத்துவ கூட்டமைப்பு உள்ளிட்ட மருத்துவ சங்கங்களின் பிரதிநிதிகள் இன்று டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் பணியிடங்களில் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும், மருத்துவர்களின் பாதுகாப்பு தொடர்பான பரிந்துரைகளைப் பெறவும் பரிந்துரைக் குழு அமைக்கப்படும் என மத்திய சுகாதார அமைச்சகம் உறுதி அளித்துள்ளது. குழுவிற்கு பரிந்துரைகளை வழங்க மாநில அரசுகள் உட்பட அனைத்து பிரதிநிதிகளும் அழைக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post