சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் வணிக வளாகத்திற்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நாடு முழுவதும் 30க்கும் மேற்பட்ட வணிக வளாகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் வணிக வளாகத்துக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர். ஆனால் வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.