மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
நாட்டின் வளர்ச்சி மற்றும் சீர்திருத்தத்திற்காக எண்ணற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், அவரது நீண்ட ஆயுளுக்காக இறைவனை பிரார்த்திப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சராகப் பதவியேற்ற பிறகு சுமூகமாகச் செயல்படும் அவரது அரசும், சமூகப் பணிகளும் வெற்றிபெற வாழ்த்துவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.