பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி கோல் கீப்பர் ஸ்ரீஜேஷுக்கு கேரள அரசு 2 கோடி ரூபாய் பரிசுத் தொகை அறிவித்துள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய ஆக்கி அணி ஸ்பெயினை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றது. இந்தியா வெண்கலப் பதக்கம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் இந்திய அணியின் ஆக்கி கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ். பாரிஸ் ஒலிம்பிக்குடன் ஓய்வு பெறுவதாக ஸ்ரீஜேஷ் ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி ஸ்பெயினுக்கு எதிரான போட்டியுடன் ஓய்வு பெற்றார். இதையடுத்து அவருக்கு இந்திய ஜூனியர் அணியின் பயிற்சியாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில், பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய வீராங்கனை ஸ்ரீஜேஷுக்கு கேரள அரசு 2 கோடி ரூபாய் பரிசுத் தொகை அறிவித்துள்ளது. முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஸ்ரீஜேஷுக்கு ரூ.2 கோடி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.