தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளதாக அனகப்பள்ளி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்
ஆந்திர மாநிலம் அனகப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அச்சுதபுரம் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் உள்ள மருந்து தொழிற்சாலையில் 80க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது மதிய உணவு நேரத்தில் மருந்து தொழிற்சாலையில் உள்ள அணுஉலை வெடித்து நொறுங்கியது. அப்போது அருகில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீப்பிடித்து எரிந்தது.
இந்த திடீர் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளதாக அனகப்பள்ளி மாவட்ட ஆட்சியர் விஜய கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். விபத்தில் பலத்த காயம் அடைந்த 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு அரசு ஆதரவு அளிக்கும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உறுதி அளித்துள்ளார்.
Discussion about this post