இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது
டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி டி20 உலக கோப்பையை 2வது முறையாக கைப்பற்றியது.
இந்நிலையில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவும், பிசிசிஐ செயலர் ஜெய்ஷாவும் இன்று மும்பையில் உள்ள சித்திவிநாயகர் கோவிலுக்கு சென்று சிவனை தரிசனம் செய்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.