கடந்த கல்வியாண்டில் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 65 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தோல்வியடைந்துள்ளதாக மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிளஸ் 2 பொதுத் தேர்வில் மத்திய கல்வி வாரியத்தில் 12 சதவீதமும், மாநில கல்வி வாரியத்தில் 18 சதவீதமும் தோல்வியடைந்துள்ளதாக பொதுத் தேர்வுகள் குறித்து ஆய்வு நடத்திய மத்திய கல்வி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த கல்வியாண்டை விட, 2023ல் மாணவர்களின் ஒட்டுமொத்த செயல்திறன் குறைந்துள்ளது, இருப்பினும், தேர்ச்சி சதவீதத்தில் மாணவிகளே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.