தகுதியற்ற விமானிகளை வைத்து இந்த விமானத்தை இயக்கியதற்காக ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.90 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முன்னணி விமான நிறுவனங்களில் ஏர் இந்தியாவும் ஒன்று. இந்நிறுவனத்தின் விமானங்கள் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகளை ஏற்றிச் செல்கின்றன.
இந்நிலையில், தகுதியற்ற விமானிகளை கொண்டு விமானத்தை இயக்கியதற்காக ஏர் இந்தியா நிறுவனத்துக்கு 90 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஏர் இந்தியாவின் நிர்வாக இயக்குநருக்கு ரூ.6 லட்சமும், விமானப் பயிற்சி இயக்குநருக்கு ரூ.3 லட்சமும் அபராதம் விதித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகத்திற்கு விமான நிறுவனங்கள் தொடர்ந்து அறிக்கை அளித்தபோது, தகுதியற்ற விமானிகளைக் கொண்டு ஏர் இந்தியா விமானத்தை இயக்கியது தெரியவந்தது. இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனத்திடம் விளக்கம் கேட்டதில், தகுதியற்ற விமானிகள் மூலம் விமானம் இயக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதனால் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.90 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
Discussion about this post