நேபாளத்தில் பேருந்து விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவின் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த 43 பேர் 10 நாள் ஆன்மீக சுற்றுலாவாக நேபாளத்துக்கு பேருந்தில் சென்றனர்.
நேபாளத்தின் பொக்காரா நகரில் இருந்து இன்று காலை காத்மாண்டு நோக்கி பேருந்து சென்று கொண்டிருந்தது. தனஹான் மாவட்டத்தில் உள்ள மர்ஸ்யாங்டி ஆற்றின் அருகே பேருந்து சென்று கொண்டிருந்த போது, கவிழ்ந்து ஆற்றில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த பயங்கர விபத்தில், 16 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மற்றும் பலர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்த சம்பவத்தில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மேலும் 11 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் இந்த சம்பவத்தில் உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.மேலும் இந்த விபத்தில் 16 பேர் படுகாயமடைந்துள்ளனர். பலத்த காயம் அடைந்த அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Discussion about this post