ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி பாஜக கட்சியின் மத்திய தேர்தல் குழுக் கூட்டம் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நாளை நடைபெறுகிறது.
ஜம்மு காஷ்மீரில் மூன்று கட்டங்களாகவும், ஹரியானாவில் ஒரு கட்டமாகவும் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. அதன்படி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அடுத்த மாதம் 18ம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 25ஆம் தேதியும், 3ஆம் கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 1ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.அதேபோல் ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல் அக்டோபர் 1ஆம் தேதி நடைபெறவுள்ளது.
ஜம்மு காஷ்மீர் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில், பாஜக மத்திய தேர்தல் குழுக் கூட்டம் டெல்லியில் நாளை நடைபெறுகிறது. இதில் கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டு தேர்தல் வியூகம் வகுப்பார்கள் என்று தகவல் வெளியானது.
Discussion about this post