ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் சுமார் நூறு பள்ளி மாணவிகளை கூட்டு பலாத்காரம் செய்த வழக்கில் 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
1992 ஆம் ஆண்டு அஜ்மீரில் ஒரு கும்பல் பள்ளி மாணவிகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தது. இந்த வழக்கில் ஏற்கனவே 9 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட நபீஸ் சிஷ்டி, நசீம், சலீம் சிஷ்டி உள்ளிட்ட 6 பேர் மீதான விசாரணை அஜ்மீர் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டது.
அந்த வகையில் பள்ளி மாணவிகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த 6 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
Discussion about this post