ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து கொண்டு வரப்பட மாட்டாது என அமித்ஷா தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி செப்டம்பர் 18ம் தேதி முதல் கட்ட தேர்தலும், 25ம் தேதி 2ம் கட்ட தேர்தலும், 3ம் கட்ட தேர்தல் அக்டோபர் 1ம் தேதியும் நடக்கிறது.அக்டோபர் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும். தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் பிரசாரத்தை தொடங்கியுள்ளன.
குறிப்பாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முக்கிய கட்சிகளான மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் தேசிய மாநாட்டு கட்சி ஆகியவை தேர்தலில் வெற்றி பெற்றால் மீண்டும் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து சட்டத்தை கொண்டு வருவோம் என தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளன.
இந்நிலையில், சத்தீஸ்கரில் நக்சலைட்டுகளை ஒழிப்பது தொடர்பான உயர்மட்ட ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு உள்துறை அமைச்சர் அமித்ஷா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டம் 370ஐ மீண்டும் கொண்டுவருவதாக மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் தேசிய காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அமித் ஷா, சிறப்பு அந்தஸ்து சட்டம் 370க்கு ஜம்மு காஷ்மீருக்கு இப்போதும் என்றும் இடமில்லை. ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து கொண்டு வரப்பட மாட்டாது,” என்றார்.
Discussion about this post