வரதட்சணை தராததால் மருமகள் 6வது மாடியில் இருந்து கீழே தள்ளப்பட்ட கொடூர சம்பவம் நடந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டம், மும்பாரா பகுதியைச் சேர்ந்தவர் ஷபீர் முக்தார் ஷேக். இவருக்கு திருமணமாகி மனைவி (வயது 40) உள்ளார்.
இதற்கிடையில், ஷபீர் முக்தாரின் தாய், தந்தை மற்றும் குடும்பத்தினர் மருமகளை வரதட்சணை கேட்டு துன்புறுத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த மாதம் 31ம் தேதி மருமகள் மற்றும் ஷபீரின் குடும்பத்தினருக்கு இடையே வரதட்சணை தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஷபீரின் குடும்பத்தினர் மருமகளை அடுக்குமாடி குடியிருப்பின் 6வது மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டனர். சம்பவத்தில் பலத்த காயமடைந்த பெண்ணை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண் கடந்த வெள்ளிக்கிழமை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் ஷபீர் முக்தார் ஷேக், அவரது தாய், மாமா நூர் முகமது மற்றும் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Discussion about this post