பிரதமர் மோடி தனது வானொலி நிகழ்ச்சியான மன் கி பாத் மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
பிரதமர் மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். அந்த வகையில், இம்மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
விண்வெளி துறையில் இந்தியா முன்னேறி வருகிறது. 21ஆம் நூற்றாண்டில் வளர்ந்த பாரதத்தை உருவாக்க பல நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய பின், அரசியல் பின்னணி இல்லாத ஒரு லட்சம் இளைஞர்களை அரசியல் கட்சிகளில் சேர வலியுறுத்தினேன். என்னுடைய இந்த கருத்து பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தற்போது இளைஞர்கள் அரசியலில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இது தொடர்பாக நாடு முழுவதும் உள்ள இளைஞர்களிடமிருந்து எனக்கு கடிதங்கள் வந்துள்ளன. சமூக வலைதளங்களிலும் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. மக்கள் எனக்கு பல்வேறு ஆலோசனைகளை அனுப்பியுள்ளனர்,” என்றார்.