இந்தியாவின் சிறந்த முதல்வர்கள் பட்டியலில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் முதலிடம் பிடித்துள்ளார்.
நாட்டில் சிறப்பாக செயல்படும் முதல்வர்கள் குறித்து தனியார் நாளிதழ் கருத்துக்கணிப்பு நடத்தியது. நாடு முழுவதும் உள்ள 30 மாநிலங்களில் இருந்து 1,36,463 பேரிடம் கருத்துகள் கேட்கப்பட்டன.
இதில் 33 சதவீதம் பேர் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். அதன்படி, நாட்டின் சிறந்த முதல்வர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 13.8 சதவீத ஆதரவுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
அடுத்து மம்தா பானர்ஜிக்கு ஆதரவாக 9.1 சதவீதம் பேரும், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு 4.7 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர்.
Discussion about this post