ஜனாதிபதி திரௌபதி முர்மு கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் தனது செய்தியில், “சக குடிமக்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜென்மாஷ்டமி நாளில், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை வணங்குவோம். இந்த மகிழ்ச்சித் திருவிழா பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தெய்வீக இலட்சியங்களுக்கு நம்மை அர்ப்பணிக்க தூண்டுகிறது.
ஸ்ரீ கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் இடையிலான உரையாடல் முழு மனிதகுலத்திற்கும் உத்வேகம் மற்றும் அறிவொளியின் நித்திய ஆதாரமாகும். நாட்டின் முன்னேற்றம் மற்றும் செழிப்புக்காக பாடுபடுவேன் என்று திரௌபதி முர்மு உறுதியளித்துள்ளார்.
Discussion about this post