நூற்றுக்கணக்கான பயனற்ற காலனித்துவ சட்டங்கள் ஒழிக்கப்பட்டுள்ளன என்று பிரதமர் மோடி கூறினார்.
ராஜஸ்தானின் ஜோத்பூர் உயர்நீதிமன்றத்தின் பவள விழாவில் பங்கேற்ற அவர், நீதி நிர்வாகம் எளிமையாகவும் தெளிவாகவும் இருந்தாலும், அதன் நடைமுறை கடினமானது என்றார்.
நீதி நிர்வாகத்தை சீரமைக்க தேசம் பல வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகளை எடுத்துள்ளது திருப்தி அளிப்பதாகக் கூறிய பிரதமர் மோடி, நூற்றுக்கணக்கான நடைமுறைச் சாத்தியமில்லாத சட்டங்கள் நீக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டினார்.
நாடு சுதந்திரம் அடைந்து பல தசாப்தங்களுக்குப் பிறகு, இந்திய தண்டனைச் சட்டத்திற்குப் பதிலாக, அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்ட பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறினார்.
அப்போது, நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்து பேசிய அவர், பத்தாண்டுகளுக்கு முன் உலகில் 10வது பொருளாதாரமாக இருந்த இந்தியா, தற்போது ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இன்று தேசத்தின் எதிர்பார்ப்புகள் மிக அதிகமாக இருப்பதாகவும், நவீன வளர்ச்சிக்கான புதுமைகளை அறிமுகப்படுத்துவது அவசியம் என்றும் பிரதமர் மோடி கூறினார்.
Discussion about this post