லடாக்கில் 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார்.
2019 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரு தனி யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது. இதில் மத்திய பிரதேசமான லடாக்கில் இரண்டு மாவட்டங்கள் மட்டுமே இருந்தன.
லடாக்கில் 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில். லடாக்கில் ஜன்ஸ்கர், திராஸ், ஷாம், நுப்ரா, சங்துங் ஆகிய ஐந்து மாவட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. புதிய மாவட்டங்களை உருவாக்குவதன் மூலம், மக்களுக்கான நலத்திட்டங்கள் அவர்களை எளிதில் சென்றடையும்.. வளர்ச்சியடைந்த மற்றும் வளமான லடாக்கை உருவாக்க வேண்டும் என்ற பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
Discussion about this post