கொல்கத்தா பெண் மருத்துவர் கூட்டு பலாத்காரம் செய்யப்படவில்லை என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ராவின் கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி., முரண்பட்ட கருத்தை தெரிவித்துள்ளார். பெண் மருத்துவர் கூட்டு பலாத்காரம் செய்யப்படவில்லை என்றும் அவரது எலும்புகள் உடைக்கப்படவில்லை என்றும் மஹுவா மொய்த்ரா கூறினார்.
மேலும், தனது உடலை அவசர அவசரமாக தகனம் செய்யவில்லை என்றும் முரண்பட்ட கருத்தை பதிவு செய்துள்ளார்.
Discussion about this post