பிரதமர் மோடி அடுத்த மாதம் முதல் வாரத்தில் சிங்கப்பூர் மற்றும் புருனே ஆகிய நாடுகளுக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடி வருகையையொட்டி, இந்தியா மற்றும் சிங்கப்பூர் அமைச்சர்கள் இடையே 2வது வட்டமேஜை மாநாடு நடைபெற்றது.
இதில் இந்திய தரப்பில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், பியூஷ் கோயல், அஷ்வினி வைஷ்ணவ், சிங்கப்பூர் தரப்பில் துணை பிரதமர் கான் கிம் யாங், அமைச்சர்கள் விவியன் பாலகிருஷ்ணன், கே.சண்முகம், ஜோசபின் டியோ ஆகியோர் கலந்து கொண்டனர்.