பாகிஸ்தானில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டிற்கு பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு இஸ்லாமாபாத்தில் அக்டோபர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மும்தாஸ் சாரா பலோச் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, மாநாட்டில் பங்கேற்க உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதை ஏற்கனவே பல நாடுகள் உறுதி செய்துள்ளன. இதில் எந்தெந்த நாடுகள் பங்கேற்கும் என்பது குறித்த தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என மும்தாஜ் சாரா பலோச் தெரிவித்துள்ளார்.
Discussion about this post