ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு வழங்கப்படும் பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு தற்போது இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இசட் பிளஸுடன் கூடுதல் பாதுகாப்பை ASL (Advanced Security Liaison) வழங்க உள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், காங்கிரஸ், முன்னாள் தலைவர் சோனியா உள்ளிட்டோருக்கு ‘இசட் பிளஸ்’ உடன் ஏஎஸ்எல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடிக்கு சிறப்பு பாதுகாப்பு படையான எஸ்பிஜி பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இது நாட்டிலேயே மிக உயர்ந்த பாதுகாப்பு நடைமுறை என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post