தமிழகத்தில் மேலும் 2 வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
தமிழகத்தில் தற்போது மொத்தம் 5 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், சென்னை எழும்பூர் – நாகர்கோவில், மதுரை – பெங்களூரு கண்டோன்மென்ட் இடையே புதிய வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இந்த புதிய வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் இன்று தொடங்கி வைக்கிறார். சென்னை சென்ட்ரலில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை எழும்பூர் – நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவை புதன்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்களும், பெங்களூரு – மதுரை வந்தே பாரத் ரயில் செவ்வாய் தவிர வாரத்தில் 6 நாட்களும் இயக்கப்படுகிறது.
வந்தே பாரத் ரயில் அட்டவணை:-
எழும்பூர் – நாகர்கோவில் (20627 – 20628) இடையே வந்தே பாரத் விரைவு ரயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, கோவில்பட்டி, நெல்லை ஆகிய 7 இடங்களில் நின்று செல்லும். இந்த ரயிலில் மொத்தம் 16 பெட்டிகள் இருக்கும். இதில் 1 எக்சிகியூட்டிவ் கிளாஸ் மற்றும் மீதமுள்ள கேபின்கள் ஏசி. இது ஒரு கூடுதல் காராக இருக்கும்.
புதிய வந்தே பாரத் ரயில் சென்னை எழும்பூரில் இருந்து காலை 5 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.50 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். நாகர்கோவிலில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்கு புறப்பட்டு இரவு 11.15 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடையும். எனவே இந்த ரயில் மீண்டும் ஒரே நாளில் இயக்கப்பட உள்ளது.
அதேபோல், மதுரையில் இருந்து பெங்களூரு செல்லும் புதிய வந்தே பாரத் ரயில் (20671 – 20672) மதுரையில் இருந்து காலை 5.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 1 மணிக்கு பெங்களூரு சென்றடையும். இந்த ரயில் திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணராஜபுரம் ஆகிய 6 நிலையங்களில் நின்று செல்லும். மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு, மறுமார்க்கத்தில் இரவு 9.54 மணிக்கு மதுரை சென்றடையும். இந்த ரயிலில் 8 பெட்டிகள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post