இந்த தொடரில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
20 வயதுக்குட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர் பெரு நாட்டில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற பெண்களுக்கான 1000 மீட்டர் நடை ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவைச் சேர்ந்த 17 வயது வீராங்கனை ஆர்த்தி வெண்கலப் பதக்கம் வென்றார். இந்த தொடரில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவின் ஜூமா பைமா (43:26.60), மெய்லிங் சென் தங்கம் மற்றும் வெள்ளி வென்றனர்.