பாராலிம்பிக் போட்டியில் இந்திய அணி இதுவரை மொத்தம் 5 பதக்கங்களை வென்றுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கான 17வது பாராலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வருகிறது. இதில் உலகம் முழுவதும் இருந்து 4,400 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 84 ஆண், பெண் வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதேவேளை, பாராலிம்பிக் துப்பாக்கி சுடுதல் பெண்களுக்கான 10 மீற்றர் ஏர் ரைபிள் SH1 இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. 8 பேர் கொண்ட இறுதிப் போட்டியில் 211.1 புள்ளிகளுடன் 3வது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றார். ஈரானின் சரே ஜவன்மார்டி 236.8 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கத்தையும், துருக்கியின் ஐசல் 231.1 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.
பாராலிம்பிக் போட்டியில் இந்திய அணி 1 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 5 பதக்கங்களை வென்றுள்ளது.