விஜய் கட்சியில் சேரப் போவதாக வெளியான செய்தியை நடிகை ரோஜா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
தமிழ்நாட்டின் மிகவும் பிரபலமான நடிகை ரோஜா. ஆந்திராவைச் சேர்ந்த ரோஜா, திருமணத்துக்குப் பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கினார். தற்போது ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திராவில் கட்சியின் முக்கிய நிர்வாகியாக உள்ளார். ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் சுற்றுலாத்துறை அமைச்சராகவும் ரோஜா பதவி வகித்தார். சமீபத்தில் நடந்த ஆந்திர சட்டசபை தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் கட்சி படுதோல்வி அடைந்தது. இந்த தேர்தலில் நகரி தொகுதியில் போட்டியிட்ட நடிகை ரோஜாவும் படுதோல்வி அடைந்தார்.
இந்நிலையில் நடிகர் விஜய் தமிழகத்தில் தொடங்கியுள்ள தமிழ்நாடு வெற்றி கழகம் கட்சியில் நடிகை ரோஜா இணையவுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின. இதுபற்றி விளக்கம் அளித்த நடிகை ரோஜா, நடிகர் விஜய் தொடங்கிய கட்சியில் தான் இணைவதாக வெளியான செய்திகளை திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதுகுறித்து ரோஜா மேலும் கூறியதாவது:- நான் வாழும் வரை ஜெகன்மோகன் ரெட்டிக்காக பாடுபடுவேன். அவரும் கட்சியும் என் மீது நம்பிக்கை வைத்துள்ளனர் என்பது அனைத்து கட்சி தலைவர்களுக்கும் இயல்பானது என அவர் கூறினார்.
Discussion about this post