மல்யுத்த வீரர் வினேஷ் போகத் கலந்து கொண்டு விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.
பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணி நடத்தினர். ஆனால் பஞ்சாப் மற்றும் ஆரியானா இடையேயான ஷம்பு எல்லையில் அவர்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து, கடந்த பிப்ரவரி 13ம் தேதி முதல் விவசாயிகள் அங்கு போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்த நிலையில் நேற்று 200வது நாளை எட்டியது. இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் மல்யுத்த வீரர் வினேஷ் போகத் கலந்து கொண்டு விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார். பின்னர் பேசிய வினோஷ் போகட், விவசாயிகளின் கோரிக்கை சட்டவிரோதமானது அல்ல என்றார். அதற்கு அரசு செவிசாய்க்க வேண்டும்,” என்றார்.
Discussion about this post