தமிழகத்தில் மத மாற்றம் அதிகரித்து வருவது வருத்தம் அளிப்பதாக ஆர்எஸ்எஸ் செய்தி தொடர்பாளர் சுனில் அம்பேகர் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் பாலக்காட்டில் 3 நாட்களாக நடைபெற்ற ஆர்எஸ்எஸ் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நிறைவடைந்தது. இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த சுனில் அம்பேகர், நூற்றாண்டை நிறைவு செய்யும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் முக்கிய நோக்கமே தேச சேவைதான்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மத மாற்ற நடவடிக்கைகள் வருத்தம் அளிப்பதாக கூறிய அவர், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் விரைந்து நீதி கிடைக்க சட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
வங்காளதேச கலவரத்தால் பாதிக்கப்பட்ட இந்துக்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது என்று ஆர்எஸ்எஸ் செய்தி தொடர்பாளர் சுனில் அம்பேகர் வேதனை தெரிவித்துள்ளார்.
இடஒதுக்கீடு விவகாரத்தில் ஆர்எஸ்எஸ் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர், சமூகத்தில் இடஒதுக்கீடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்ற அமைப்பின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார்.
Discussion about this post