மாற்றுத்திறனாளிகளுக்கான 17வது பாராலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடந்து வருகிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கான 17வது பாராலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடந்து வருகிறது. இந்தத் தொடரில் பேட்மிண்டனில், ஆடவர் ஒற்றையர் SL3 இன் இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது.
இந்தப் போட்டியில் இந்தியாவின் நித்தேஷ் குமார், பிரிட்டனின் டேனியல் பெத்தேலை எதிர்கொள்கிறார். முதல் செட்டை 21-14 என நித்தேஷ் குமாரும், இரண்டாவது செட்டை 21-18 என டேனியல் பெத்தேலும் கைப்பற்றினர்.
அதன்பின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது செட் பரபரப்பாக நடைபெற்றது. இதில் இருவரும் மாறி மாறி புள்ளிகளை எடுத்தனர். முடிவில் 3வது செட்டில் 23-21 என டேனியல் பெத்தேலை வீழ்த்தி நித்தேஷ் குமார் தங்கப் பதக்கம் வென்றார். தோற்கடிக்கப்பட்ட டேனியல் பெத்தேல் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது.இந்தியா இதுவரை 2 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் வென்றுள்ளது.