கொல்கத்தாவில் பெண் மருத்துவர் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் மேற்கு வங்க அரசுக்கு எதிராக பாஜகவினர் போராட்டம் நடத்தினர்.
கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தேசத்தையே உலுக்கியது. இந்த விவகாரத்தில் மேற்கு வங்க அரசு மெத்தனமாக செயல்படுவதாகக் கூறி பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். சிலிகுரியில் பாஜகவினர் போலீசார் அமைத்திருந்த தடுப்பு வேலியை அகற்ற முயன்றதால் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதேபோல், மேற்கு வங்க மாநிலம் அலிபுர்துவாரில் பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டதைக் கண்டித்து போராட்டம் நடத்திய பாஜகவினரை போலீஸார் கலைத்தனர்.
பெண் மருத்துவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை மேற்கு வங்க அரசு பாதுகாக்கும் என்று கூறி அலிப்பூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பாஜகவினர் போராட்டம் நடத்தினர்.
முன்னதாக கொல்கத்தாவில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க தவறிய போலீஸ் கமிஷனர் வினீத் கோயல் பதவி விலக கோரி பயிற்சி மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
Discussion about this post