குறிப்பிட்ட 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் ரூ.2,000 நோட்டுகளை செலுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மே 19-ம் தேதி ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. நோட்டுகளை வங்கி கணக்கில் செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டது.
அப்போது ரூ.3 லட்சத்து 56 ஆயிரம் கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. 30ம் தேதி நிலவரப்படி, 97.96 சதவீத நோட்டுகள் வங்கிக்கு திரும்பியுள்ளன.
ரூ.7,261 கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் மட்டுமே பொதுமக்கள் மத்தியில் புழக்கத்தில் இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த நோட்டுகளை குறிப்பிட்ட 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் செலுத்தலாம் என்றும் கூறியுள்ளது.
Discussion about this post