ஓணம் பண்டிகையை முன்னிட்டு எர்ணாகுளம் – பெங்களூரு இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க கேரளாவின் எர்ணாகுளம் மற்றும் கர்நாடக மாநிலம் பெங்களூரு இடையே சிறப்பு ரயிலை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:-
எர்ணாகுளம்-எலகங்கா சிறப்பு ரயில் (வண்டி எண்: 06101) எர்ணாகுளத்தில் இருந்து 4 மற்றும் 6ம் தேதிகளில் மதியம் 12.40 மணிக்கு புறப்பட்டு அன்றைய தினம் இரவு 11 மணிக்கு எலிகங்கா சென்றடையும்.
எதிர் திசையில், எல்கங்கா-எர்ணாகுளம் சிறப்பு ரயில் (06102) எல்கங்காவில் இருந்து 5 மற்றும் 7ம் தேதிகளில் அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு, அதே நாளில் மதியம் 2.20 மணிக்கு எர்ணாகுளத்தை சென்றடையும். இந்த ரயில்கள் திருச்சூர், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஒயிட்பீல்டு, கே.ஆர்.புரம் ஆகிய ரயில் நிலையங்களில் இரு திசைகளிலும் நின்று செல்லும். அவ்வாறு கூறுகிறது.
Discussion about this post