கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 5,152 இந்தியர்கள் சட்டவிரோதமாக உள்நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனேடிய எல்லை வழியாக சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழையும் இந்தியர்களின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக அமெரிக்க எல்லைப் பாதுகாப்பு புள்ளிவிவரம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி-ஜூன் காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு இதே காலகட்டத்தில் எண்ணிக்கை 47% அதிகரித்துள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 5,152 இந்தியர்கள் சட்டவிரோதமாக உள்நுழைந்ததாக தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் இந்த எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் இந்தியர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதால் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க எல்லைப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
Discussion about this post