தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 28 கோடி மதிப்புள்ள சாருஸ் என்ற போதைப் பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திரேஸ்புரம் வடக்கு கடற்கரை பகுதியில் ரோந்து சென்ற தூத்துக்குடி கியூ பிரிவு போலீசார் படகுக்காக காத்திருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் தூத்துக்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் அமல்ராஜ், நிஷாந்தன் மற்றும் விக்டர் என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து, கஞ்சா செடியின் பிசினில் இருந்து தயாரிக்கப்பட்ட 56 கிலோ சரஸ் என்ற பொருளை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு போலீசில் ஒப்படைக்கப்பட்டனர்.
Discussion about this post