டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழ் துறையை உருவாக்க மத்திய அமைச்சர் எல்.முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
துணைத் தலைவர் ஜெகதீப் தங்கரை மத்திய அமைச்சர் எல்.முருகன் சந்தித்தார். அப்போது, தில்லி பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் தொன்மையான தமிழைப் படிக்கும் வகையில் கல்லூரிகளில் தமிழ்த் துறைகளை உருவாக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். அப்போது டெல்லி தமிழ்ச் சங்க உறுப்பினர்களும் உடனிருந்தனர்.
இந்த சந்திப்பு குறித்து எல்.முருகன் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: துணைத் தலைவரை சந்திக்க வாய்ப்பு அளித்ததற்கு நன்றி. அவருடன் பழகுவது ஒரு கற்றல் அனுபவம் மற்றும் உத்வேகம் என்று கூறினார்.
Discussion about this post