பாலியல் பலாத்காரத்துக்கு எதிரான மசோதா மேற்கு வங்க சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
கொல்கத்தாவில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்நிலையில், பாலியல் வன்முறைக்கு எதிரான புதிய மசோதாவை மேற்கு வங்க சட்டப்பேரவையில் மம்தா பானர்ஜி தாக்கல் செய்தார்.
“அபராஜிதா பெண்கள் மற்றும் குழந்தைகள் மசோதா 2024” என்ற தலைப்பில், இந்த மசோதா குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகளை வழங்குவதன் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்கிறது. இந்த மசோதா பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனையை வழங்குகிறது.
Discussion about this post