தெலுங்கானா மற்றும் சத்தீஸ்கர் எல்லையில் உள்ள தண்டேவாடா வனப்பகுதியில் அதிரடிப்படையினர் நடத்திய என்கவுன்டரில் 10 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.
தண்டேவாடா வனப்பகுதியில் நக்சலைட்கள் நடமாட்டம் இருப்பதாக சிறப்பு அதிரடிப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியை சுற்றி வளைத்த போலீசார் நக்சலைட்டுகள் மீது தாக்குதல் நடத்தினர்.
10 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். உடலை மீட்ட போலீசார், நக்சலைட்டுகளின் ஆயுதங்கள் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்து, ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.