உத்தரபிரதேச மாநிலத்தில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களின் ஊதியம் நிறுத்தப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் தங்களது அசையும் மற்றும் அசையா சொத்து விவரங்களை ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்க உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
அதை ஏற்று, இதுவரை 71 சதவீத ஊழியர்கள், ‘மானவ் சம்பதா’ என்ற இணையதளத்தில், சொத்து விவரங்களை பதிவேற்றம் செய்துள்ளனர். இந்நிலையில், சொத்து விவரங்களை தாக்கல் செய்யாத 2 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களின் ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், சொத்து விவரங்களை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Discussion about this post