டெல்லி-விசாகப்பட்டினம் விமானம் மீது மர்மநபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர்.
டெல்லியில் இருந்து விசாகப்பட்டினம் சென்ற ஏர் இந்தியா விமானம் மீது நேற்று இரவு மர்மநபர்கள் வெடிகுண்டு வீசினர். இது தொடர்பாக டெல்லி போலீசாருக்கு தகவல் கிடைத்ததும், உடனடியாக விசாகப்பட்டினம் விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
டெல்லியில் இருந்து வந்த விமானத்தில் 107 பயணிகள் இருந்தனர். விமானம் விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் தரையிறங்கியவுடன் பயணிகள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டு வெடிகுண்டு நிபுணர்கள் விமானத்தில் தீவிர சோதனை நடத்தினர்.
சோதனையில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எதுவும் சிக்காததால் வெடிகுண்டு மிரட்டல் புரளி என அதிகாரிகள் உறுதி செய்தனர். வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
Discussion about this post