பாரா ஒலிம்பிக் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் 2 பதக்கங்களை வென்றனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கான 17வது பாராலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடந்து வருகிறது. இதில் உலகம் முழுவதிலுமிருந்து 4,400 விளையாட்டு வீரர்கள் மற்றும் பெண்கள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 84 ஆண், பெண் வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் இந்தியாவின் அஜித் சிங் 65.62 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தையும், சுந்தர் சிங் 64.96 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர். இதன் மூலம் இந்திய அணி பாரா ஒலிம்பிக்கில் 3 தங்கம், 6 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 18 பதக்கங்களை வென்றுள்ளது.
Discussion about this post