மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில், திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு கிளர்ச்சிக் குழுக்களுடன் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
திரிபுரா மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்த மத்திய அரசும், மாநில அரசும் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு கிளர்ச்சிக் குழுக்களுடன் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
மத்திய அரசு மற்றும் திரிபுரா அரசுடன் திரிபுரா தேசிய விடுதலை முன்னணி மற்றும் அனைத்து திரிபுரா புலிப் படை குழுக்களும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஒப்பந்தம் கையெழுத்தானபோது திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மூத்த அதிகாரிகள் உடனிருந்தனர்.
Discussion about this post