இணைய பாதுகாப்பு இல்லாமல் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் நிறுவன தினத்தையொட்டி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், நாட்டின் பாதுகாப்புக்காக சைபர் கிரைம் மையம் இதுவரை 600க்கும் மேற்பட்ட உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் பல்வேறு இணைய முகவரிகள், சமூக ஊடக கணக்குகள் மற்றும் சைபர் குற்றவாளிகள் பயன்படுத்தும் மொபைல் பயன்பாடுகளை முடக்கியுள்ளது என்றும் அவர் கூறினார்.
தற்போதைய சூழலில் சைபர் செக்யூரிட்டி இல்லாமல் நாட்டின் பாதுகாப்பு இல்லை என்று அமித்ஷா திட்டவட்டமாக கூறினார்.
Discussion about this post