சொந்த ஊர் செல்பவர்களின் வசதிக்காக, ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை முதல் துவங்குகிறது.
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையை கொண்டாட பெரும்பாலான மக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு ரயிலில் செல்கின்றனர். பயணிகளின் வசதிக்காகவும், கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கவும், ரயில் டிக்கெட் முன்பதிவு முன்கூட்டியே துவங்குகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி 13ஆம் தேதி (திங்கட்கிழமை) போகி பண்டிகையும், ஜனவரி 14ஆம் தேதி (செவ்வாய்கிழமை) பொங்கல் பண்டிகையும், ஜனவரி 15ஆம் தேதி (புதன்கிழமை) மாட்டுப் பொங்கலும், 16ஆம் தேதி (வியாழன்) பொங்கலும் கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு, சொந்த ஊர் செல்பவர்களின் வசதிக்காக, ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை முதல் துவங்குகிறது.
அந்த வகையில், ஜனவரி 10ம் தேதி பயணம் செய்ய விரும்புபவர்கள் நாளை ஜனவரி 11ம் தேதி ஜனவரி 13ம் தேதியும், ஜனவரி 12ம் தேதி ஜனவரி 14ம் தேதியும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். ஜனவரி 13-ம் தேதி போகி பண்டிகையில் பயணம் செய்ய விரும்பும் பயணிகள் 15-ம் தேதியும் முன்பதிவு செய்து பயணம் செய்யலாம். ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் டிக்கெட் முன்பதிவு மையங்கள் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
Discussion about this post