டெல்லி முதல்வர் பதவிக்கு ஆம் ஆத்மி கட்சியினரிடையே பலத்த போட்டி.
மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் ஜாமீனில் வெளிவந்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பதவி விலகப் போவதாக அறிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் டெல்லி சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வெறும் 6 மாதங்கள் மட்டுமே முதல்வர் பதவியை பிடிப்பதற்கு ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.
மூத்த அமைச்சர்கள் ஆதிஷி, கைலாஷ் கெளட், செளராவ் பரத்வாஜ் மற்றும் ராஜ்யசபா உறுப்பினர்களான ராகவ் சதா, சஞ்சய் சிங் ஆகியோர் போட்டியில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கல்வி மற்றும் பொதுப்பணித் துறையை வகிக்கும் அதிஷுக்கும், நிதியமைச்சர் கைலாஷ் கெளட்டிற்கும் இடையே கடும் போட்டி நிலவுவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
Discussion about this post