பிரதமர் மோடியின் தற்போதைய ஆட்சிக் காலத்தில் நாட்டில் ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசு முடிவு செய்து, அதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவை நியமித்தது.
இக்குழு ஆய்வு நடத்தி, ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறைக்கு ஆதரவாக மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தது.
இந்நிலையில், தற்போது பிரதமர் மோடி ஆட்சிக்கு வருவதற்குள், அதாவது 2029க்குள் அனைத்துக் கட்சிகளுடன் கலந்தாலோசித்து ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறையை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 13 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
Discussion about this post